Um den Armen zu helfen.
To help the poor.
Pour aider les pauvres.
Per aiutare i poveeri.
ஏழைகளுக்கு உதவும் நிறுவனம்.
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title

                                                                                Copyright 2012-13 © helpingtamil.com , All rights reserved                                                                  

பழ மொழி ஒன்று சொல்லுவார்கள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா?என்று அதே போல் அப்பாவின் 50 வது பிறந்த தினத்துக்கு பிள்ளைகள் நத்தன,இளங்கோ, சஞ்சை மனைவி திருமதி ரேகா பாஸ்கரன் அவர்களும் இணைந்து உதவும் இதயங்கள் ஜெர்மனி நிறுவனத்துடன் தொடர்வு கொண்டு அப்பாவுக்கு தெரியாமல் அப்பாவுக்கு பிடித்தமாதிரி 50வது பிறந்த நாள் நினைவாக நல்ல விடயம் ஒன்று செய்ய வேண்டும். போரால் பாத்திக்கப் பட்ட பிள்ளைகள் படிக்க வசதி இல்லாமல் இருக்கின்றார்களா? என்று எம்மிடம் கேட்டார்கள். ஜெர்மனில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள்! உண்மையில் எங்களுக்கு மனம் நிறைந்த சந்தோசம் .உடனடியாக விரைந்து செயல்பட்டு நாட்டுக்காக 4 உடன்பிறப்பை கொடுத்துவிட்டு சிறு வயதில் பெற்றோரையும் இழந்து எமக்காக வாழ்ந்த கோணேஸ்வரியின் கணவனை 2009 வவுனியா முகாமில் வைத்து விசாரணைக்கு என்று அழைத்து செல்லப்பட்டார். இன்று வரையும் தேடிக்கொண்டு இருக்கின்றார். இவருடைய வீட்டில் இராணுவம் முகாமிட்டிருப்பதால் இவர் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இவருக்கு இதயத்தில் வருத்தம் மாதாந்தம் கிளினிக்கு போகக்கூட பணமில்லாமல் கஸ்ரப்படுகின்றார். இவருடைய இரண்டு பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு கஸ்ரப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் எப்பவுமே உறவுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் திரு.கிருஷ்ணசாமி பாஸ்கரன் (மோகன்- Bad Friedrichshall ) அவர்களின் 50 வது பிறந்த நாள் நினைவாக பிள்ளைகள் தங்களின் பணத்தில் இவர்கள் இரண்டு பேரின் படிப்பிற்க்காக ரூபா 5000,00 மாதாந்தம் கொடுப்பதாகவும் இந்த கொடுப்பனவு பிள்ளைகள் படித்து முடிக்கும் வரைக்கும் கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்கள்.நான்கு மாதத்திற்க்கான நிதியினை தற் சமயம் வழங்கியுள்ளார்கள். திரு கிருஷ்ணசாமி பாஸ்கரன் (மோகன்) அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடுழி காலம் நலமாக வாழ வாழ்த்துகின்றோம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் " உதவும் இதயங்கள் நிறுவனம் ஜெர்மனி“ இவ் உதவியை நேரடியாக சென்று வழங்கிய எமது செயற் பாட்டாளர் திரு.கமலேந்திரன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
22815496_761638960699744_1096342846340851962_n
22829231_761638734033100_2542516837910359563_o
22829332_761638724033101_1940814604030857703_o
22792543_761638737366433_5842504726564955523_o