உதவும் இதயங்கள்
Helping Hearts

Um den Armen zu helfen.
To help the poor.
Pour aider les pauvres.
Per aiutare i poveeri.
ஏழைகளுக்கு உதவும் நிறுவனம்.


Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title

                                                                                Copyright 2012-13 © helpingtamil.com , All rights reserved                                                                  

என்ன கொடுமை பாருங்கள் யுத்தத்தால் அப்பாவை இழந்து தவிக்கும் இந்தப் பிள்ளைகளின் தாயார் கடன் பட்டு சவூதி அரேபியா சென்றுள்ளார் மூன்று மாதங்களிற்கு பின் தாயாரின் எந்த வித தொடர்வும் இல்லாமல் வறுமையில் வாடும் நிலை இந்த சிறுவர்களுக்கு.இவர்களின் வாழ்வாதாரம் பாடசாலையில் கொடுக்கும் உணவும் இந்த பாடசாலையில் மிகுதி உணவு இருப்பின் பிள்ளைகளின் அம்மம்மா கேட்டு வாங்கிச் சென்று தானும் கஸ்ரப்பட்டு பிள்ளைகளை வளர்த்து வருகின்றார் . எமது செயல் பாட்டாளர்கள் நேரில் அவர்களுடைய வீட்டிற்கு சென்று பார்வையிட்டு எம்மிடம் அறிவித்தார்கள்.நாங்கள் அவர்களை பராமரிக்கும் இராமகிருஷ்ணன் சந்திரா(பிள்ளைகளின் அம்மம்மா)பிள்ளைகளை எமது கிளை திறப்பு விழாவிற்கு அழைத்து உதவும் இதயங்களின் இயக்குனர் திரு ம.சிறிரஞ்சன் அவர்கள் பிள்ளைகளின் பாடசாலை தேவைக்குரிய உபகரணங்கள் மற்றும் 10.000 ரூபா உடனடியா வழங்கப்பட்ட்து அத்துடன் மாதாந்த 5,000 ரூபா வீதம் எமது திட்டமிடல் செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியளிக்கப் பட்டது.அடுத்து இராமகிருஷ்ணன் சந்திரா (பிள்ளைகளின் அம்மம்மா)அவர்களை விழாவில் குத்து விளக்கேற்ற வைத்து கெளரவித்தோம். அதனை தொடர்ந்து அவர்களின் தாயாரை தேடும் முகமாக எமது கிளை திறப்பு விழாவிற்கு வருகை தந்த திட்மிடல் பணிப்பாளர் ஊடாக பிள்ளைகளின் தாயாரை தேடும் விடயமாக உரையாடப்பட் டு உடன் அரச அலுவலகத்தில் அனுப்பி பதிவுகள் மேற்கொள்ளப் பட்டது.அன்பாந்த உறவுகளே இப்படி பல எம் உறவுகள் கஸ்ரத்தில் வாடுகிறார்கள் அவர்களை இனம் கண்டு உதவுவதில் எமது தாயகச் செயற்பட்டாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் அந்த வகையில் நீங்களும் ஒருகணம் சிந்தியுங்கள்! உங்கள் உதவிக்காக எம் உறவுகள் ஆவலுடன் காத்திருக்கிறாரார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.நன்றி" உதவும் இதயங்கள் நிறுவனம் ஜெர்மனி"
என்ன கொடுமை பாருங்கள் யுத்தத்தால் அப்பாவை இழந்து தவிக்கும் இந்தப் ...........