கொரோனாவின் கொடிய நோயின் தாக்கத்தால் அன்றாடம் கூலிவேலை செய்யும் கிராம மக்களின் நிலையை கருத்தில் கொண்டு
உதவி வழங்கியவர்: மில்டன் கீன்ஸ் லண்டன் (மகளிர் அணி) திரு திருமதி சிறிதரன் வேணிஉதவித்தொகை:400,00பவுன்ஸ்( 95.138,71)
இன்றைய கொடுப்பனவு :60000,00மிகுதி இருப்பு:35.138,71பயனாளிகள்:59
இடம்;அம்பாறை
+++++++++++++++++++++++++++++++++++++++
மரம் உதவுகிறது நிழல் தந்து..புல்லங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து..ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட…நாம் சற்று கவனித்தோமானால் எல்லாமே உதவுகின்றன என்று தோன்றும்!ஆகவே முடிந்த அளவு கண்டிப்பாக பிறர்க்கு உதவி செய்ய வேண்டும். அடுத்தவருக்கு உதவி செய்தால் பின்னால் அது உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்.நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதுதான் பிரபஞ்ச விதி..!முடிந்த மட்டும் உதவுவோம்..!
++++++++++++++++++++++++++++++++++++++++++
கொரோனாவின் கொடிய நோயின் தாக்கத்தால் அன்றாடம் கூலிவேலை செய்யும் கிராம மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மில்டன் கீன்ஸ் லண்டன் (மகளிர் அணி) திரு திருமதி சிறிதரன் வேணி தம்பதிகளின் நிதி அனுசரணையுடன் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு முதலாம் கட்ட உலர் உணவு நிவாரணம் கொடுக்கும் நிகழ்வு 2020.04.23 வியாழக் கிழமை அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவிதன்வெளி-01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது இதில் தெரிவு செய்யப்பட்ட 59 குடும்பங்களுக்கு 1000/- பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் சார்பாக உதவி பிரதேச செயலாளர் எஸ் நவநீதன் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் விபுலானந்தரின் சிறுவர் இல்ல உறுப்பினர்கள் கிராம அபிவிருத்தி சங்க நிருவாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர். அவர்கள் அனைவருக்கும் மற்றும் திரு பிரபாகரன் அவர்களுக்கும் நன்றி. அத்துடன் அன்புக்குரிய மில்டன் கீன்ஸ் லண்டன் (மகளிர் அணி) திரு திருமதி சிறிதரன் வேணி அவர்களுக்கும் அவருடைய சமூக சிந்தனைக்கும் மனமார்ந்த நன்றிகள் அவர்களுடைய குடும்பம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.
