ஜேர்மனி கயில்புறோன் தர்மகர்த்தா ஒருவர் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்ணுக்கு வாழ்வாதார உதவியை வழங்கினார்

0

புதன், ஜனவரி 28, 2015 – Helping Hearts ஜேர்மனி கயில்புறோன் தர்மகர்த்தா ஒருவர் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்ணுக்கு வாழ்வாதார உதவியை வழங்கினார் ஊரெல்லாம் கோயிலுக்கு கோபுரம் கட்டவும் வர்ணம் பூசுவதிலும் ஆலாய்பறக்க, ஜெர்மனிலுள்ள இந்து ஆலய தர்மகர்த்தா குழுவொன்று யுத்த அவலங்களுடன் வாழும் குடும்பபெண்ணிற்கு கைகொடுத்து கரை சேர்த்துள்ளது. எனினும் அந்த தர்மகர்த்தா குழுவின் கோயிலும் கூட இப்போது தான் கட்டப்பட்டுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜேர்மனியிலுள்ள கயில்புறோன் (Heilbronn Germany) கந்தசாமி கோவில் தற்போது தான் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இறுதி யுத்தத்தில் கணவரை சரணடையக்கொடுத்த மங்கையற்கரசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனித்து அவல வாழ்க்கை வாழ்ந்துவரும் சூழலில் அண்மைய வெள்ளத்தால் நடுத்தெருவிற்கு வந்திருந்தார். இது தொடர்பான செய்தி அறிந்து கயில்புறோன் கந்தசாமி கோவில் ஆலய தர்மகர்த்தா குழு அவரிற்கான வாழ்வாதார உதவியினை வழங்கியுள்ளது. ஜெர்மனிய உதவும் இதயங்கள் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட அவ்வுதவியை வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் ச.சஜீவன் நேரில் எடுத்து சென்று வழங்கியிருந்தார்.

உங்களுடைய கருத்துகள்

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More