ஐரோப்பா பரமேஸ்வரன் சஞ்சாய் பாராட்டி புலம்பெயர் அமைப்பினால் துருக்சக்கர வண்டி மற்றும் ஒரு தொகுதி பணமும் கையளிப்பு!

0

வெள்ளி, அக்டோபர் 31, 2014 – 16:37 மணி தமிழீழம் | அகக்கீரன், ஐரோப்பா பரமேஸ்வரன் சஞ்சாய் பாராட்டி புலம்பெயர் அமைப்பினால் துருக்சக்கர வண்டி மற்றும் ஒரு தொகுதி பணமும் கையளிப்பு! யாழ் மாவட்டத்தில் புலமைப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுள் ஒருவரான அளவெட்டி அருனோதயா கல்லூரியை சேர்ந்த பரமேஸ்வரன் சஞ்சாய் பாராட்டி புலம் பெயர் தமிழரான சீறிதாசன் அவர்களின் அனுசரணையில் ஜேர்மன் உதவும் இதயங்கள் அமைப்பின் ஊடாக துவிச்சக்கரவண்டி ஒன்றையும் ஒரு தொகுதி பணமும் வலி வடக்கு பிரதேசசபை துணை தவிசாளர் ச.சஜீவன் அவர்களால் வழங்கப்பட்டது.

இம் மாணவன் மிகவும் கஸ்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் இதுவரை காலமும் கல்வி கற்பதற்கு மின்சார வசதிகள் அற்ற நிலையிலும் தற்காலிக வீட்டில் இருந்து கல்வி கற்று வலி வடக்குக்கு பெருமை சேர்த்துள்ளான். இம்மாணவனின் விடாமுயாற்சியும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் முயற்சியின் விளைவாக இம்மாணவன் சாதனை படைத்துள்ளான். இம்மாணவனின் எதிர்காலத்திலும் கல்வி சாதனை படைக்க வலிவடக்கு பிரதேச சபை துணை தவிசாளர் இம்மாணவனுக்கு மாதாந்த படிப்பு செலவுக்காக ரூபா 2000ம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மின்சார சபையிடமும், பிரதேச செயலகத்திடமும் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கு இணங்க மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அருணோதயா கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன், புலம் பெயர் தமிழரான சீறிதாசன், மாணவனின் தாய், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.


உங்களுடைய கருத்துகள்

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More