யாழ்ப்பாணம் போரினால் பாதிக்கப்பட்ட பாலகிருஸ்ணனுக்கு ஜேர்மனிய உறவுகளின் உதவி கிடைக்கப்பெற்றது!

0

செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014 – 21:20 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் போரினால் பாதிக்கப்பட்ட பாலகிருஸ்ணனுக்கு ஜேர்மனிய உறவுகளின் உதவி கிடைக்கப்பெற்றது! யுத்தம் தந்த வலிகள் எமக்காகப் போராடிய பலரை வீடுகளிற்குள் முடக்கியே வைத்திருக்கின்றது. குறிப்பாக அநாதரவாக வந்திருந்த அவர்களிற்கு சமூகம் எதனையும் செய்திருக்கவில்லையென்ற சீற்றமும் அதற்கு காரணம்.அத்தகைய முடக்க நிலையின் தொடர்ச்சியே தொடரும் தற்கொலைகள். இத்தகைய சூழலினில் அவர்கள் இயல்பு வாழ்வை வாழ அவர்களிற்கு கைகொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.பாலகிருஸ்ணன் முரளி.

இறுதி யுத்தத்தினில் தனது இரண்டு கால்களையும் இழந்தவன்.சிறந்ததொரு வீடியோ பட எடிட்டரான அவனிற்கு தனது தொழிலை ஆரம்பி;க்க எவரேனும் கைகொடுத்தால் போதும் தன்னாலும் வாழ முடியுமென நம்பினான். அவனது கோரிக்கை கிடைக்கப்பெற்றிருந்த நிலையினில் தனது தொழிற்குத் தேவையான கணனியொன்றை வழங்க ஜெர்மனிய உறவுகளது உதவும் இதயங்கள் அமைப்பு உடாக ஆலன் உறவுகள் முன்வந்திருந்தனர்.

அவனிற்கான கணனியை உதவும் இதயங்;கள் அமைப்பினது இணைப்பாளர் சண்முகலிங்கம் சஜீவன் வீடு தேடி எடுத்து சென்று வழங்கியிருந்தார். விரைவினில் ஒரு குழந்தைக்கு தந்தையாகப்போகும் அவனது குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது. ஏன் நீங்களும் கூட ஒரு குடும்பத்திற்கு விளக்கேற்றலாமல்லவா!

உங்களுடைய கருத்துகள்

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More