மேற்கு அவுஸ்திரேலியா இலங்கை தமிழ்ச் சங்கம். உதவித்தொகை :110.200,00
உதவி வழங்கியவர்கள்:உறவுக்கரங்கள் – மேற்கு அவுஸ்திரேலியா இலங்கை தமிழ்ச் சங்கம்.
உதவித்தொகை :110.200,00
கையிருப்பு:4.800,00 இந்த நிதி மாங்குளத்தில் வேறு ஒரு வேலைத்திட்டத்துக்கு வழங்கப்படும்.
இடம்:மெனிக்பாம் 4 படிவம் வவுனியா .
உதவி:பொது ஆழ்துளைக் கிணறு
பயனாளிகள்: 25 குடும்பங்களுக்கு மேல்

காற்றுக்குப் பிறகு நம் உடலுக்கு மிகவும் அவசியமானது நீர்தான். நம் உடல் 70% நீரால் ஆனது. உணவில்லாமல் பல நாட்கள் இருக்க முடிந்த நம்மால் சில தினங்கள் கூட நீரில்லாமல் இருக்க முடிவதில்லை. அந்த நீரினை வளங்கிய உறவுக்கரங்கள் – மேற்கு அவுஸ்திரேலியா இலங்கை தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.

போரின் வடுக்களுடன் மீள்குடியேறிய மெனிக்பாம் 4 படிவம் வவுனியா மக்களின் துயர் துடைக்க தாங்களாகவே முன்வந்து உதவி வழங்கிய உறவுக்கரங்கள் – மேற்கு அவுஸ்திரேலியா இலங்கை தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மெனிக்பாம் 4 படிவம் மக்கள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த தம்பி புஸ்பகாந்தன் அவர்களுக்கும் ஆழ்துளைக்கிணறு அடிப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்து தந்த சமூகசேவையாளர் திரு விநோதன் அவர்களுக்கும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த திரு எஸ்.சண்முகானந்தன் (உதவி திட்டமிடல் அதிகாரி பிரதேச செயலகம் வெங்கள செட்டிகுளம், திரு எஸ். ராதாகிருஷ்ணன் (கிராமசேவையாளர்),கிராம அபிவிருத்தி தலைவர் மற்றும் எமது வவுனியா மகளிர் அணித்தலைவி திருமதி நிரூபா சசிராஜ் அவர்களுக்கும் நன்றி உதவும் இதயங்கள் நிறுவனம்.







