சிறு உதவியாக இருப்பினும் ஒருவருக்கு தேவைப்படும் போது உதவி செய்தால் அவர்களுக்கு மனநிம்மதியைத் தரும்.
உதவி வழங்கியவர்கள் :- உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்கள்.
உதவி பெற்றவர் :- க.பிரியதர்சினி கருப்பண்ணன்
இடம் :- கற்குவாரி மாங்குளம்
உதவித்திட்டம் :- வைத்திய செலவு
உதவித்தொகை :- 10,000.00
எம்மோடு இணைந்து பயணிக்கும் அன்பான உறவுகளே! சிறு உதவியாக இருப்பினும் ஒருவருக்கு தேவைப்படும் போது உதவி செய்தால் அவர்களுக்கு மனநிம்மதியைத் தரும். போரினால் பாதிக்கப்பட்டு பல சஞ்சலங்களுடன் வாழ்ந்து வரும் வி.கருப்பண்ணன் அவர்களின் மகள் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிட்சைபெறும் இந்த நேரத்தில் உதவும் இதயங்கள் நிறுவனமான எம்மோடு தொடர்புகொண்டு எமது மகளான பிரியதர்சினிஅவர்களின் வைத்திய செலவுக்காக உதவி செய்யுமாறு கேட்டதற்கமைவாக உதவும் இதயங்கள் நிறுவனத்தின் நிதியில் இருந்து 10,000.00 ரூபா வழங்கப்பட்டது. இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கிய எமது செயற்பாட்டாளர் செல்வன் கிஷோபன் மற்றும் புதுக்குடியிருப்பு தவிசாளர் திரு செ.பிரேம்காந் அவர்களுக்கும் இந்த உதவியை வழங்கிய எமது உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் “உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி”
