எமது சேவைகள் / செயல்த் திட்டங்கள்? (verlinken mit Was ist unsere Mission und Vision?)
(இலங்கை) தாயகத்தில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் போரினால் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல்.போரினால் அதிகளவு பாதிக்கப்பட்டு அங்க உறுப்புக்களை இழந்தவர்களுக்கும்,போரினால் கணவரை இழந்து வறுமையில் வாழும் உறவுகளுக்கும்,போரினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி,மற்றும் வறுமையில் வாழும் உறவுகளுக்கும் முன்னுரிமைப் படுத்தி பாதிக்கப் பட்டவர்களை சரியான முறையில் ஆராய்ந்து அவர்களுக்கு உதவி வருகின்றோம்.
தொடர்ச்சியான உதவி:
1.) 57 பிள்ளைகளின் தொடர்ச்சியான மாலை நேரக்கல்வி.
2.) தாய் தந்தையை இழந்த உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு.
3.) தாய் தந்தையை இழந்தோர் எம்மிடம் உதவி கேட்க்கும் பட்ஷத்தில் உதவுதல் பாடசாலை உபகரணம் மிதி வண்டி,உடை
போன்றவை வழங்கப்படுகின்றது.
4.) பிள்ளைகளை இழந்த பெற்றோர்களுக்கு தொழில் வாய்ப்பு அங்காடி (கடை) பால் மாடு ,கோழி,ஆடு வளர்த்தல் விவசாயம் செய்ய
ஊக்கிவித்தல்,
5.) தண்ணீர் வசதி இல்லாதவர்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்தல்.
6.) வறண்ட பிரதேசங்களில் வீதியோர மரங்கள் நடுதல்.
7.) கிராமம் தோறும் மகளிர் அமைப்பை உருவாக்கி சிறு நிதி வழங்கி இந்த நிதியில் இருந்து இந்தக் குழு சுழற்சி முறை கடன்
திட்டத்தை ஆரம்பிக்கும்.அத்துடன் எமது திட்டத்துக்கு அமைய கிராமங்களில் நடக்கும் தற்கொலை சிறுவர் துஸ் பிரயோகங்கள்
எதிராக விழிப்புணர்வு செய்தல் , பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு உதவுதல்,சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளுதல் அல்லது உதவுதல் ,கிராமத்தில் விழிப்புணர்வு போன்ற பல விடயங்களை இவ் குழுக்கள் ஊடாக முன்னகர்த்தவுள்ளோம்.
8.) சிறுவர் இல்லங்களுக்கான உதவி